முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் நின்று செல்லும் இன்டர்சிட்டி ரயில்

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்ததை அடுத்து இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்ததை அடுத்து திருச்சி - செங்கல்பட்டு இடையே ஓடும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 16-ம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் சிதம்பரத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

கரோனா ஊரடங்கு காரணமாக ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் சில ரயில்களை மட்டும் இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த சில தினங்களாக இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரயில் சிதம்பரத்தில் நிற்கவில்லை.

இதுகுறித்து சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனையடுத்து தென்னக ரயில்வே நிர்வாகம் ஜூன் 16-ம் தேதி முதல் சிதம்பரத்தில் இந்த ரயில் நின்று செல்லும் என அறிவித்துள்ளது.

தினமும் காலை 6  மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் 8.48 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். பின்னர் இங்கிருந்து 08.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு செங்கல்பட்டைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் மாலை 3 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு மாலை 06.15 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

பின்னர் இங்கிருந்து 06.17 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 09.30 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். இரு மார்க்கத்திலும் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →