முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 307நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே குறைந்தது.  

Updated On : 16 ஜூன், 2020 at 11:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:18 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 307நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே குறைந்தது.  

மேட்டூர் அணை பாசனம் மூலம்  12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்திற்கு  ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28ந்தேதிவரை 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும். கடந்த ஆண்டு ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் அணையிலிருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 13ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் 7ந்தேதி அணை நிரம்பியது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த நீர்பாசன  ஆண்டு மேட்டூர் அணை அடுத்தடுத்து நான்கு முறை நிரம்பியது. நடப்பு ஆண்டு ஜனவரி 28ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த நீர்பாசன ஆண்டு முழுவதும் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 151 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ந்தேதி முதல் நேறறு வரை தொடர்ந்து 307 நாட்களாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்தது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது.

Advertisement

கடந்த 2005 2006ம் ஆண்டில் தொடர்ந்து 427 நாட்கள் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 307நாட்கள் 100 அடிக்கு குறையமல் இருந்துள்ளது. அனணயின் நீர் மட்டம் திருப்திகரமாக இருந்ததால் நடப்பு நீர்பாசன ஆண்டில் குறித்த நாளான ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில்தான் குறித்த நாளில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,210 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.37 டி.எம்.சியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.