விருதுநகரில் தலைமை காவலர் உட்பட மாவட்டத்திலுள்ள 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகர் போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக (38) வயது ஆண் பணிபுரிந்து வருகிறார். இவர் உடல் நிலை சரியில்லாததால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவருடன் பணிபுரிந்த போக்குவரத்து காவலர்கள் 18 பேருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், போக்குவரத்து காவல் நிலையம் கிருமிநாசினி ஜல்லிக்கட்டு மூடப்பட்டது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் எட்டு பேருக்கு கரனோ தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.