கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை 30 ஆம் தேதி வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

DIN

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை 30 ஆம் தேதி வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் இன்று நள்ளிரவு முதல் 30-ஆம் தேதி வரை 12 நாள்கள் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தபோவதாக தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்தது. 

இந்த முழு முடக்கம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதை, கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக்கூடங்களும் மூடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT