முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,396 பேருக்கு கரோனா: 33,231 மாதிரிகள் பரிசோதனை

​தமிழகத்தில் புதிதாக 2,396 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
​தமிழகத்தில் புதிதாக 2,134 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:


தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,396 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,396 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,254 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைக்கு மட்டும் 33,231 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய அறிவிப்பில் 38 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.  

அதேசமயம், இன்று மட்டும் 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 31,316 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 24,822 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →