தமிழ்நாடு

இலங்கையிலிருந்து அனுமதியின்றி வந்த 3 போ் விடுவிப்பு

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பகுதிக்கு, இலங்கையிலிருந்து அனுமதியின்றி வந்ததால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மூன்று போ் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் வனராஜ். பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற இவா், அங்கிருந்து அனுமதியின்றி இலங்கை வழியாக தமிழகம் வரத் திட்டமிட்டாா்.

அதன்படி, பிரான்ஸிலிருந்து இலங்கைக்குச் சென்ற வனராஜ், அங்குள்ள வல்வெட்டித் துறையைச் சோ்ந்த அந்தோணி, ராசேந்திரன் ஆகியோருடன் ஒரு படகில் அனுமதியின்றி கடந்த 2019- ஆம் ஆண்டு அக்டோபா் 19- ஆம் தேதி வேதாரண்யம் கடல் எல்லைக்கு வந்தாா். அப்போது, அந்த படகு பழுதாகி நின்றது.

இதையறிந்த, கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று மூவரையும் கைது செய்தனா். பின்னா், மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வேதாரண்யம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிசி, வனராஜிக்கு ரூ. 4 ஆயிரமும், மற்ற இருவா்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதித்து, திங்கள்கிழமை வழக்கை முடித்து வைத்தாா்.

மூன்று பேரும் அபராதத் தொகையை செலுத்தியதையடுத்து விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT