தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல் 
தமிழ்நாடு

தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் 120 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் 120 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சுங்குவார்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 120 தெருக்கூத்து கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தனியார் சிலர் நிதியுதவியுடன் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சிங்கிலிப்பாடி ராமசந்திரன், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT