தமிழ்நாடு

சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து

DIN

சென்னை: நாளை முதல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக  வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரையில் அதிகரித்து வரும் தொற்றின் காரணமாக நாளை நள்ளிரவு முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக விமான நிறுவனங்கள் சார்பாக வெளியாகியுள்ள தகவலில், ‘சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாகவும், அதேபோல தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதால் சேவை நிறுத்தம் செய்யபப்டுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT