தமிழ்நாடு

விழுப்புரத்தில் கரோனா அதிகரிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க மீண்டும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பகுதியிலிருந்து திரும்புவோரால், தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வட்டாட்சியர்கள் தலைமையில் 8 குழுக்கள் அமைத்துக்  கண்காணிப்பு  தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும். 

குறிப்பாக விழுப்புரம் நகரப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். கிருமி நாசினி தெளித்து மாத்திரைகள் வழங்கப்படும்.

காய்ச்சல் தொண்டை வலி வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற  அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் விரிவான ஆலோசனை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT