தமிழ்நாடு

ஆரணி: இரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 29 பேருக்கு கரோனா

DIN

ஆரணி வட்டம் விளைக்கிராமம், ஆரணி டவுன் பள்ளிக்கூட தெருவில் உள்ள இரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 29 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களிலிருந்து தங்கியவர்கள், கரோனா தொற்று உடையவர்களின் தொடர்பிலிருந்தவர்கள் என கண்டறியப்பட்ட 568 பேருக்கு ஜூன்.22 -ல் சளி பரிசோதனை  செய்யப்பட்டது. 

பரிசோதனை முடிவில் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரிப் பகுதியில் அமைந்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்பு முகாமிலிருந்த 74 பேரில் 5 ஆண்கள், 2 பெண்களுக்கும், செய்யாறு வட்டம் நெடுங்கல் கிராமத்தி்ல்  மூதாட்டி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.  

ஆரணி வட்டம் விளை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2, 10 மாத ஆண் குழந்தைகள், 5 வயது சிறுமி, 8 வயது சிறுவன், 29, 53 வயதுடைய பெண்கள், ஆதனூர் கிராமத்தில் 19, 24, 40 வயதுடைய பெண்கள், 18, 23, 27 வயதுடைய ஆண்கள், பையூர் கிராமத்தில் 50 வயது ஆண், புதுப்பாளையம் கிராமத்தில் 30 வயது ஆண், ஆரணி நகரம் பள்ளிக்கூடத் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண், 3 வயது சிறுமி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதேபோல்  வந்தவாசி வட்டம் கீழ்கொடுங்காலூரில் 45 வயது ஆண், அம்பேத்கர் நகரில் இரு இளைஞர்கள் உள்பட 29 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.  

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு உள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் சுகாதாரப்பணிகள் மேற்கொண்டு உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

100 முறை விடியோ பார்த்துவிட்டு பேட்டிங் ஆட சென்றாலும் ஆட்டமிழப்பேன்: ரோஹித்தை அச்சுறுத்திய பந்துவீச்சாளர் யார்?

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT