சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கரோனா நிவாரண நிதியை வீடுகளுக்கேச் சென்று வழங்காவிடில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அம்மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கரோனா நிவாரண நிதியை மக்களுக்கு நேரடியாக அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டுமென்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா நிவாரண நிதி வழங்க சில ரேஷன் கடைகள் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, கரோனா நிவாரண நிதியை வீடுகளுக்கு சென்று வழங்காவிடில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.