காவல்துறையைக் கண்டித்து மன்னார்குடியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் என இரு வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக, காவல்துறையைக் கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் என இரு வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக, காவல்துறையைக் கண்டித்து புதன்கிழமை மன்னார்குடியில் வணிகர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாந்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவாது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், பொது முடக்கக் காலத்தில் கடைகளைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதனால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்ததாகக் கூறி, இதில் தொடர்புடைய காவல்துறையினரைப் பணி நீக்கம் செய்து, வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கையை வலியுறுத்தி
மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே, வணிகர் நலச் சங்க மாவட்ட பொறுப்பாளர் டி.என்.பாஸ்கர் தலைமையில் வணிகர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.