கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்குகிறது: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது. 

DIN

ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.  

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 47,650 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளனர். 27,986 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 18,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,951 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. 

அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,717 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5,534 பேரும், கோடம்பாக்கத்தில் 5,216 பேரும், அண்ணா நகரில் 5,260 பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT