தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை

DIN


சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்தால் அதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐக்கு மாற்றுவதாக இருந்தால் மாற்றுங்கள். அது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தந்தை - மகன் இறப்பு குறித்த விசாரணைக்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிகிறது. எனவே, தடயவியல் அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்குச் சென்று ஆவணங்களை சேகரிக்க வேண்டும். 

தந்தை - மகன் மரணத்தில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும், ஆவணங்களை சரிபார்க்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT