தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN


சென்னை: தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 6வது நாளாக 3,943 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 2,393 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,943 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,856 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 87 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் வழக்கம்போல் அதிகபட்சமாக இன்று 2,393 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 60 பேர் (அரசு மருத்துவமனை -44, தனியார் மருத்துவமனை -16) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 1,201 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், இன்று 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 50,074 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 38,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11,70,683 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT