தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நீதித்துறை நடுவர் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தது, நீதித்துறை நடுவரை தவறாகப் பேசியது, நீதித்துறை நடுவர் விசாரணையை விடியோ பதிவு செய்தது போன்ற காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராகினர்.
 
மேலும் திருநெல்வேலி சரக ஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோரும் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,  பி.புகழேந்தி அமர்வு,  நீதித்துறை நடுவரின் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்காத ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன்,  தலைமை காவலர் மகாராஜன் ஆகியோர் தரப்பில் வழக்குரைஞரை நியமிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT