தமிழ்நாடு

மணப்பாறையில் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் காவலர் உயிரிழப்பு 

DIN

மணப்பாறையில் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட வையம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் பவானி(35). 2009 - ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த பவானி, திருமணம் முடிந்து 6 மாதத்திலேயே தனது கணவர் மணிவண்ணனைப் பிரிந்து கடந்த 10 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். 

தற்போது தனது 9 வயது மகளுடன், ஆண்டவர் கோவில் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வரும் பவானி, ஞாயிற்றுக்கிழமை பணி நிமித்தமாக கோவை வரை தனது இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும், அங்கு பணியினை முடித்த நிலையில், அங்கிருந்து மயங்கிய நிலையில் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு தானே சென்று சிகிச்சைக்கு அனுமதித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

அங்கு மருத்துவர்களிடம் தான் எலிபேஸ்ட் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார் பவானி. பவானியின் சகோதரியின் வேண்டுகோளையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பவானி, திருச்சி தனியார் மருத்துவமனை, அதனைத்தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனை என முதலுதவிகள் பெற்று அபாய கட்டத்தில், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி காவல்நிலையத்தில் பவானி சகோதரி ஆனந்தி அளித்துள்ள புகாரில், தனது சகோதரி பாவனி கடந்த 2013-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியிலிருந்தபோது உடன் பணிபுரிந்த தோழிகள் பவானியிடம் சில தொகைகள் கடனாகப் பெற்றதாகவும், அவற்றைத் திரும்பிக் கேட்ட நிலையில் அவர்கள் கடன் தொகை திருப்பி தர மறுத்துள்ளனர் எனவும், இதன் காரணமாக தனது சகோதரி மன வேதனையிலிருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பெண் காவலர் உயிரிழப்பு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வையம்பட்டி காவல்துறையினர், பவானியின் தற்கொலைக்கு கடன் திருப்பி பெற முடியவில்லை என்ற வேதனையா அல்லது குடும்ப பிரச்னையா என விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT