தமிழ்நாடு

அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதியானது: மியாட் மருத்துவமனை

DIN

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது. இருந்தும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். 

இந்நிலையில் நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்து வந்ததை அடுத்து, இன்று செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, அமைச்சர் கே.பி. அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அமைச்சர் தரப்பில் இத்தகவல் மறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT