முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் அருகே பெண்ணைக் கட்டி போட்டு நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே பெண்ணைக் கட்டி போட்டு நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:05 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே பெண்ணைக் கட்டி போட்டு நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் விவசாயியான இவரது மனைவி பூபதி (55) இன்று 5ஆம்தேதி அதிகாலை பாத்ரூம் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரை பிடித்து கீழே தள்ளி அவரது கை கால்களை கட்டிப்போட்டு கழுத்தில் கிடந்த 3பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு ஜோடிகம்மல் கொலுசு ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடிவிட்டார் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசில் பூபதி புகார் செய்தார்.புகாரின் பேரில், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் டிஎஸ்பி பால்துரை சம்பவ இடத்தை பார்வையிட்டடார். 

பெண்னை கட்டி போட்டு நகை பறித்து சென்ற சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →