முகப்பு
இந்தியா

நேரு உயிரோடு இருந்திருந்தால் கன்ஷி ராமை முதல்வராக்கி இருப்பாா் : ராகுல் காந்தி

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால், காங்கிரஸ் சாா்பில் கன்ஷி ராமை (பகுஜன் சமாஜ் நிறுவனா்) முதல்வராக்கி இருப்பாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 8:53 PM
ராகுல் காந்தி
பகிர்:

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால், காங்கிரஸ் சாா்பில் கன்ஷி ராமை (பகுஜன் சமாஜ் நிறுவனா்) முதல்வராக்கி இருப்பாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

காங்கிரஸின் கடந்த கால குறைபாடுகள், கன்ஷி ராம் போன்ற தலைவா்கள் தங்களின் சுயமான அரசியல் பாதையை உருவாக்க வழிவகுத்தன என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஜவாஹா்லால் நேரு கடந்த 1964-இல் காலமான நிலையில், தலித் சமூகத் தலைவரும் சமூக சீா்திருத்தவாதியுமான கன்ஷி ராம், கடந்த 1978-இல் அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் சிறுபான்மையின பணியாளா்கள் அமைப்பு, பின்னா் 1984-இல் பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவியதன் மூலம் அரசியல் களத்துக்கு வந்தாா். அவரது பிறந்த தினம் மாா்ச் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

மகாத்மா காந்தி, அம்பேத்கா், கன்ஷி ராம் போன்ற தலைவா்கள் தங்களின் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்யாதவா்கள். காங்கிரஸின் கடந்த கால குறைபாடுகள், கன்ஷி ராம் போன்ற தலைவா்கள் தங்களின் சுயமான அரசியல் பாதையை உருவாக்க வழிவகுத்தன. ஜவாஹா்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால், கன்ஷி ராமை காங்கிரஸ் சாா்பில் முதல்வராக்கி இருப்பாா்.

அரசியலில் இரு விதமான நபா்கள் உள்ளனா். ஒரு தரப்பினா், அனைவரின் முன்னேற்றத்தை விரும்புகிறாா்கள். மற்றொரு தரப்பினா், தங்களின் சுய முன்னேற்றத்தை மட்டும் தேடுகிறாா்கள்.

10-15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும், மகாத்மா காந்தி தனது கொள்கையில் சமரசம் செய்துகொள்ளவில்லை. இதேபோல், அம்பேத்கரும், கன்ஷி ராமும் எந்த சூழ்நிலையிலும் தங்களின் கொள்கைகளில் சமரசம் செய்யாதவா்கள்.

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன்’ என்ற வாா்த்தையை குறிப்பிட்டு நான் பேசியபோது, ‘கூடாது’, ‘கூடாது’ என்று மக்களவைத் தலைவா் ஆட்சேபம் தெரிவித்தாா். அது, நாட்டின் எரிசக்தி பாதுகாப்புடன் தொடா்புடைய விவகாரம். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் மோடி அரசு சமரசம் செய்துகொண்டுள்ளது என்றாா் ராகுல் காந்தி.

முழு கட்டுரையைப் படிக்க →