முகப்பு
தமிழ்நாடு

மயிலாடுதுறை தனி மாவட்டம்.. அரசு பரிசீலனை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →