கோவில்பட்டி அருகே தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்தது: 31 மாணவர்கள் காயம்
கோவில்பட்டி அருகே தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 31 மாணவர்கள் காயமடைந்தனர்.
கோவில்பட்டி அருகே தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 31 மாணவர்கள் காயமடைந்தனர்.
கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் - காமநாயக்கன்பட்டி இடையே வேல்ஸ் வித்யாலயா பள்ளிப்பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் 31 மாணவ - மாணவி படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து கொப்பம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.