தமிழ்நாடு

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு விழா

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் எம்.ஜி.ஆர் 103-வது பிறந்தநாள் மற்றும் ஜெயலலைதா 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர அஇதிமுக சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் வடமாட்டிற்கு வேட்டி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழாவை தொடங்கி வைத்தனர்.

மதுரை, சிவகங்கை, களத்தில் இறங்கிய 15 காளைகளை 117 வீரர்களில், மாடு ஒன்றிற்கு 9 வீரர்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கி வருகின்றனர். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் வீரர்களை களத்தில் வீரர்களை கலங்கடித்து விளையாடி வருகிறது. இதில் வீரர்களின் கைகளில் சிக்காமல் வெற்றி பெற்ற காளைக்கும், களங்கடித்த காளையை அடக்கிய வீரர்களின் அணிக்கும் என ரூ.7001/- ரொக்க பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது. 

சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் விழாவினை காண குவிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT