முகப்பு
தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

தமிழக பாஜக தலைவராக மூத்த வழக்கறிஞரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றார். இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. 

இதையடுத்து, தமிழக பாஜக தலைவராக பலரது பெயர்கள் பேசப்பட்ட நிலையில், மூத்த வழக்கறிஞர் எல்.முருகன் என்பவரை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 

இவரது மனைவி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக  பணிபுரிந்து வருகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →