தமிழ்நாடு

கோடியக்கரை சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும்  பணி சனிக்கிழமை தொடங்கியது.

கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பசுமை மாறா காடுகள் சார்ந்த பகுதி வன உயிரின பாதுகாப்பு சரணாலயமாக உள்ளது.

இங்கு அரிய வகை வெளிமான், புள்ளிமான், மட்டக்குதிரை, காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட காட்டு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



இந்த சரணாலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விலங்குகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். நிகழாண்டு கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இந்த பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடரும்.

வனச் சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர், கல்லூரி மாணவ, மாணவியர் என 75 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT