தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள்

DIN

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகளில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி மேற்பார்வையில் 10க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வரும் ரயில்களுக்குக் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. மேலும், நடைமேடை, மேம்பாலத்திலும் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கப்படுகிறது.

அதேபோல கும்மிடிப்பூண்டி பஜாரில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து சுய சுகாதாரம் குறித்தும், கை கழுவும் பழக்கம் குறித்தும் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடைபெறும் காரோனா தடுப்பு பணிகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் செந்தாமரைச்செல்வி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT