தமிழ்நாடு

சங்ககிரி சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் மருந்து தெளிப்பு

எஸ்.தங்கவேல்

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஒலக்கசின்னானூர் ஊராட்சி பகுதியில் உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடியில் டெங்கு பணியாளர்கள் செவ்வாயக்கிழமை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை இரவு மருந்தினை தெளிக்கும் பணியில் ஈட்டுபட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்கியாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனையொட்டி  சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில்  சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன் மேற்பார்வையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாஜலபதி தலைமையில்  ஒலக்க சின்னானூர் ஊராட்சி சுகாதரா பணியாளர்கள் வைகுந்தம் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் லைசால், ஹைபோகுளோரைடு மருந்து கலவைகளை செவ்வாய்க்கிழமை இரவு முதல் தெளித்து வருகின்றனர். 

இப்பணிகளில் டெங்கு பணியாளர்கள் உள்பட பத்து பேர் சுழற்சி முறையில் ஈடுபட உள்ளனர்.   சுகாதரா குழுவினர், காவல்துறையினரும் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT