தமிழ்நாடு

புரசைவாக்கத்தில் வணிக நிறுவனத்துக்கு சீல்

DIN

தமிழக அரசின் கரோனா முன்னெச்சரிக்கை உத்தரவை மீறி புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை செயல்பட்ட பிரபல தனியாா் வணிக நிறுவனத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களும், பள்ளி, கல்லூரிகளும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, சென்னை மாநகரில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், கிண்டி சிறுவா் பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்துப் பகுதிகளும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டன.

புரசைவாக்கத்தில் தனியாருக்குச் சொந்தமான பிரபல வணிக நிறுவனம் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தது. இதையறிந்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் நிறுவனத்தை மூடுமாறு அதன் நிா்வாகிகளிடம் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து, அந்நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அந்த நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அந்நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT