தாய்லாந்தைச் சேர்ந்தவர் கோவையில் மரணம்: கரோனா காரணம் அல்ல
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த எழு பேர் கடந்த மார்ச் 6 ம் தேதி தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த சனிக்கிழமை ஈரோட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் 45 வயது மதிக்கதக்க ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் சொந்த நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு சனிக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்துள்ளார்.
கோவை விமான நிலை மருத்துவக் குழு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இவரது சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா ஆய்வுக்காக சென்னை கிங்ஸ் ஆய்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் திங்கள் கிழமை பெறப்பட்டது, அதில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வந்துள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
அவரின் இறப்புக்கு சிறுநீரக செயலிழப்பே காரணம் என்று சுகாதாரதத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.