அவிநாசி அருகே சிமெண்ட் லாரி மீது கார் மோதல்: கல்லூரி மாணவர்கள் 4 பேர் உட்பட 5 பேர் பலி
அவிநாசி அருகே சிமெண்ட் லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உட்பட 6 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே லாரி மோதி காரில் சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.
சேலம் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் காரில் உதகைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் அவிநாசியை அடுத்த பழங்கரை அருகே வியாழக்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மீது கார் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ்(21), சூர்யா(21), வெங்கட் (21) உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும், காயமடைந்த 3 பேர் அவிநாசி, கோவை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வந்த மாணவர்கள் விபரம்
சந்தோஷ் (22) தர்மபுரி- காயம் - அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதி
கார்த்தி (21) கோவை காயம் - கோவை அரசு மருத்துவமனை,
சூர்யா (21) கள்ளகுறிச்சி மற்றும்
இறந்தவர்கள்
ராஜேஸ் (21) கள்ள குறிச்சி
வெங்கட் (21) கள்ளகுறிச்சி
இளவரசன் (21) சின்னசேலம்
வசந்த் (21)
மற்றும் கார் டிரைவர் - பலி