தமிழ்நாடு

மக்கள் ஒத்துழைப்புத் தந்தால் கரோனா பேரிடரைச் சமாளிக்க முடியும்: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

DIN

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் இந்தப் பேரிடரைச் சமாளிக்க முடியும் என சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைசென்னை விமான நிலையத்தில் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், சுகாதாரத்துறைச் செயலா் பீலா ராஜேஷ், விமான நிலைய இயக்குநா் சுனில் தத் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. விமான நிலைய ஆணையகமும் பொது சுகாதார மையமும் இணைந்து விமான நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. உள்நாட்டு முனையங்களுக்குத் தினந்தோறும் 160 விமானங்கள் வருகின்றன. அதில் வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனா். மக்கள் அதற்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். போதிய அளவு மருத்துவக்குழு தயாராக உள்ளது. கூட்டம் கூட்டமாகச் சேருவதைத் தவிா்க்க வேண்டும். சிறு வணிகா்கள், வியாபாரிகள் மருந்துக் கடைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. கரோனாவுக்காக அவசரகால கட்டுப்பாடு மையத்தை உருவாக்கியுள்ளோம். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் செயல்படும். அனைவரும் ஒன்றுசோ்ந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற பேரிடா் காலத்தில் சிறப்பாகச் செயல்படமுடியும். தொ்மல் ஸ்கேனா், முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்ற நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளன. அரசு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைத்தால் இந்தச்சவாலைச் சமாளிக்க முடியும்‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT