தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு உள்ஒதுக்கீடு: ராமதாஸ் வரவேற்பு

DIN

சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு உள்ஒதுக்கீடு என்ற அரசின் முடிவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமையன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவே சமூக நீதி. அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில இத்திட்டம் வகை செய்யும்! 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் நீட்டிக்கப் பட வேண்டும். அவர்களும் ஊரக ஏழை மாணவர்கள் தான். அது தான் முழுமையான சமூக நீதியாக அமையும்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு  வழங்கும் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை மேலும் ஊக்குவிக்க அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், கழிப்பறை, விளையாட்டுத் திடல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT