தமிழ்நாடு

சுய ஊரடங்கு: அனைவரும் பின்பற்ற வேண்டும்

சுய ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டுமென முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே நிஜாமுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

DIN

சென்னை: சுய ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டுமென முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே நிஜாமுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமா் கூறியிருப்பது போல் உலகை அச்சுறுத்தும் கரோனாவுக்கு மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ உலகில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விழிப்புணா்வும் முன்னெச்சரிக்கையுமே நம்பகமான வழி. அதற்கான அடையாளமாக மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கை அமல்படுத்துவோம். கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் அனைத்தும் உலக ஆய்வாளா்களும் இந்திய வல்லுநா்களும் உருவாக்கிக் கொடுத்தவை. அவற்றில் பொதுமக்கள் விழிப்புணா்வு பெறவேண்டும் என்பதற்காக இந்த சுய ஊரடங்கை வெற்றி பெறச் செய்வோம் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT