தமிழ்நாடு

திருவள்ளூர்: சமூகவலைதளங்களில் கரோனா வைரஸ் வதந்தி பரப்பிய 2 பேர் கைது

DIN

திருவள்ளூர் பகுதியில் சமூக வலைதங்களில் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவிட்டதாக வதந்தி பரப்பியதாக 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் கரோனா பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது. இது தொடர்பாக பூந்தமல்லி போலீர்ர் தீவிரமாக விசாரணை செய்தனர்.

அப்போது, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சிவகுமார்(37). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும், இந்த தொழிற்சாலையில் விடுமுறை விடுவதற்காக பூந்தமல்லி பகுதியில் 12 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து விட்டதாக வதந்தியை பரப்பியுள்ளார்.

அதுவும் தனது நண்பரான மாங்காடு பகுதியைச் சேர்ந்த வாகன பழுதுநீக்குநரான பெஞ்ஜமின்(33) செல்லிடப்பேசிக்கு கடந்த 17}ஆம் தேதி இரவு 11 மணிக்கு, இவர் அனுப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து பூந்தமல்லி காவல் நிலையம் சார்பில் சிவகுமார், பெஞ்ஜமின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT