தமிழ்நாடு

வாடிய மக்களைக் கண்டு வாடிய தாயுள்ளம்!

DIN

சேலத்தில் ஒருவர், பசியால் வாடிய மக்கள் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்களது பசியைப் போக்கியுள்ளார். 

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுகிறது. இதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றனர். ஆனால், சாலையில் அடுத்த வேலைக்கு உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை தாயுள்ளத்தோடு வழங்கி அவர்களது பசியைப் போக்கியுள்ளார்.

அரசின் உத்தரவை ஏற்று, கரோனா தற்காப்புக்காக வீட்டுக்குள் அடங்கியிருக்கும் மக்களுக்கு இடையே, அடுத்த வேளை உணவுக்காக ஏங்கும் நிலையில் இருந்த இந்த மக்களுக்கு உணவு கிடைத்தது அவர்களுக்கு கிடைத்த ஆறுதலாகவே பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT