தமிழ்நாடு

அவசரப் பணிகளுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம்

DIN

சென்னையில் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 முதல் ஊரடங்கு  உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக நாடு முழுவதுமே போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளில், அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னையில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, மணலி, நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT