தமிழ்நாடு

ஆந்திரத்தில் மருத்துவர்களுக்கு கரோனா பரவாமல் இருக்க நூதன கருவிகளுடன் அறை

DIN

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பாகமாக நெகடிவ் ஃப்ரசர் ஐசோலேஷன் அறைகள் அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் கரோனா தொற்று நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வருவதை ஒட்டி மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் புதிய யுக்தி ஒன்றை கடைபிடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

அம்மருத்துவமனையில் கரோனா பிரிவில் பணியாற்றி வந்த ஒரு இளம் மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த புதியமுறை கடைபிடிக்க முடிவு செய்தது.
 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூச்சுகாற்று வெளியில் சென்று மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுத்தி வருவதால், அவர்களின் மூச்சுகாற்றை சுத்தப்படுத்தி வெளியில் விடும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

இதற்காக புதியதாக ஒரு ஐசோலேஷன் அறைகளை கட்டி வருகிறது. அதில் 8 தனி அறைகள் உள்ளது. இந்த அறைகள் இரும்பு தடுப்புகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹெப்பா பில்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பில்டர்கள் கரோனா நோயாளிகள் வெளியில் விடும் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து அதில் உள்ள வைரஸ் கிருமிகளை கொன்று நல்ல காற்றை வெளியே அனுப்பும் வசதி கொண்டது.

இதற்காக ரூ1.30 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் இந்த அறைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதால், இந்த தொற்று மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT