தமிழ்நாடு

மலேசியாவில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: வாழப்பாடி பகுதியில் பரபரப்பு

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு மலேசியாவில் இருந்து வந்தவர்கள் 10 பேரை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், மலேசியாவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 11-ம் தேதி மலேசியாவில் இருந்து தனது நண்பர்கள் 10 பேருடன் சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன் மீண்டும் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலைத்திருக்கு சென்றுள்ளனர். 

விமானம் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்திற்கே திரும்பியுள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்திற்குச் சென்ற சுகாதாரத் துறையினர், மலேசியாவிலிருந்து வந்து இருக்கும் 10 பேரையும் வீட்டிற்குள் தனிமையில் வைத்து கண்காணித்து வருகின்றனர். 

வெளியில் வரக்கூடாது என எச்சரித்து வீட்டுக்கு முன்பாக அறிவிப்பு ஒட்டியுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்தவ 10 பேர், தனிமையில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT