தமிழ்நாடு

விழுப்புரத்தில் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது ஊரடங்கு உத்தரவு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. 

மாவட்டத்தில் 13 சோதனை சாவடிகளிலும், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார் ஊர்காவல் படையினர் போக்குவரத்து போலீசார் நின்று பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்துத் தடுத்து வருகின்றனர்.

இருப்பினும் பல இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லித் திரிவதும், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்புவதும் சில இடங்களில் லத்தியால் போலீசார் விரட்டியும் அனுப்பி வருகின்றனர்.

காய்கறி கடைகள் மளிகை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, பேருந்துகள் இதர வாகனங்கள் இயங்காமல் பேருந்து நிலையங்களில், முக்கிய சாலைகளில் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT