முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 38ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 38ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:17 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இது சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகள் அரசால் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவுக்கு ஏற்கெனவே 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது நபர், சேலத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது நபர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →