முகப்பு
தமிழ்நாடு

கர்நாடகத்தில் 10 மாதக் குழந்தைக்கு கரோனா பாதிப்பு

கர்நாடக மாநிலம் சஜிபனடு பகுதியில் 10 மாதக் குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச், 2020 at 4:01 PM
கோப்புப் படம்
பகிர்:


பெங்களூரு: கர்நாடக மாநிலம் சஜிபனடு பகுதியில் 10 மாதக் குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்தின் சஜிபனடு பகுதியைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுளள்தாக மாவட்ட துணை ஆணையர் சிந்து பி. ருபேஷ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தும்குர் மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 60 வயது நபர் மரணம் அடைந்ததை அடுத்து, கர்நாடகத்தில் மட்டும் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கர்நாடகத்தில் தற்போது 60 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 13ம் தேதி ரயில் மூலம் தில்லி சென்று வந்த 60 வயது நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று மரணம் அடைந்தார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 24 பேர் கண்டறியப்பட்டு, அவர்களில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.