கரோனாவில் முதற்கட்ட நிலையில் தமிழகம் உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கரோனாவில் முதற்கட்ட நிலையில் தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுகரோனாவில் முதற்கட்ட நிலையில் தமிழகம் உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கரோனாவில் முதற்கட்ட நிலையில் தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரோனாவில் முதற்கட்ட நிலையில் தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும். பொதுக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம். அனைத்துத் துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
கரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 லேப் டெக்னீசியன்ஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். மக்கள் நிறைந்த பகுதிகளில் கரோனாவை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக நவீன வசதியுடன் கூடிய பிரிவு உள்ளது. கரோனா சிகிச்சைக்காக நவீன மருத்துவ வசதியுடன் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை இஎஸ்இ மருத்துவமனையிலும் கரோனா சிகிச்சை சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதில் தமிழகம் தற்போது முதல்நிலையில் உள்ளது. கரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே. 144 தடை உத்தரவு என்பது மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே. சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.