தமிழ்நாடு

கரோனா: கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு!

DIN

கரோனா தடுப்பு பணிகளுக்காகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காகவும் கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உ.மதிவாணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயரிடம் உ.மதிவாணன் வழங்கியுள்ளார்.

இது குறித்து எம்.எல். ஏ.உ. மதிவாணன் கூறியது: கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்களுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருப்பதை கடைபிடித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் நம்மால் முடிந்தவரை நல்லதை செய்யவேண்டும்.

கரோனா தடுப்புப் பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளேன். மேலும் எனது மாத ஊதியத்தையும் கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிவாரணமாக அளித்துள்ளேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT