தமிழ்நாடு

கரோனா: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் மெல்ல மெல்ல ஊடுருவி தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இதனை அடுத்து கரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி, தலைமைச் செயலர், ஊரடங்கை கண்காணிக்க, அத்தியாவசியப் பொருள் கிடைக்க அமைக்கப்பட்ட 9 குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கூட்டத்தில் சமூக இடைவெளியுடன் அமைச்சர்கள், அதிகாரிகள், கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT