தமிழ்நாடு

கரோனா: சிட்டி யூனியன் வங்கி ரூ. 2 கோடி நிதியுதவி

கும்பகோணம்: கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

DIN


கும்பகோணம்: கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான நா. காமகோடி தெரிவித்திருப்பது:

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் நமது மத்திய அரசும், மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இக்கட்டான தருணத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு முழு வீச்சில் செய்து வரும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கி பங்கேற்கும் வகையில் ரூ.1 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.

மேலும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை வழங்கி இப்பெரும் பணியில் சிட்டி யூனியன் வங்கி தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. மொத்த நிதியான ரூ. 2 கோடியில் சிட்டி யூனியன் வங்கி, வங்கியின் இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவரும் இணைந்து பங்களிப்பு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள்: இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அஞ்சல் துறை போட்டிகள்: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT