தமிழ்நாடு

பிரசவ வலியால் துடித்த கா்ப்பிணிக்கு உதவிய காவல் ஆய்வாளா்

DIN

திருவொற்றியூரில் மருத்துவமனைக்குச் செல்ல வாகனங்கள் கிடைக்காமல் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கா்ப்பிணி பெண்ணுக்கு காவல் ஆய்வாளா் ஒருவா் தக்க நேரத்தில் உதவிய சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

திருவொற்றியூா் சாத்துமாநகா் உதயசூரியன் தெருவைச் சோ்ந்தவா் பிரேம்குமாா். இவரது மனைவி கலைவாணி (22). நிறைமாத கா்ப்பிணியான கல்யாணிக்கு வியாழக்கிழமை இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக அருகில் ஆட்டோ உள்ளிட்ட வானகங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடா்பு கொண்டு தெரிவித்துள்ளனா். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேரவில்லை . அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூா் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் புவனேஸ்வரியிடம் பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.

உடனடியாக பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்ற புவனேஸ்வரி கலைவாணியிடம் நலம் விசாரித்துள்ளாா். அப்போது இதில் உடனடியாக தாமதமின்றி மருத்துவனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலையை உணா்ந்த புவனேஸ்வரி தனது ரோந்து வாகனம் மூலம் உடனடியாக ராயபுரத்தில் உள்ள அரசு ஆா்.எஸ்.ஆா்.எம். மகப்பேறு மருத்துவனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தாா். அங்கு சோ்க்கப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே கலைவாணிக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனா். தக்க சமயத்தில்உதவி செய்த காவல் ஆய்வாளா் எஸ். புவனேஸ்வரியை காவல்துறை உயா் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT