முகப்பு
தமிழ்நாடு

நாளை திறக்கப்படும் மதுபானக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி தகவல்

தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளை திறக்கப்படும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நாளில் கடும் கூட்டம் கூடியதால் தமிழக காவல்துறை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. 

மேலும், மதுபானக் கடைகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிற்பகல் 1 முதல் 3 மணி வரையிலும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மதுபானம் விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →