ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்க அறிவிக்கை வெளியீடு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அதையடுத்து அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள “வேதா நிலையம்” இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.
Advertisement
இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த வீடான “வேதா நிலையம்” இல்லம் நினைவில்லமாக்கப்படும் என்றும், அரசு அதற்கான நிலம் கையகப்படுதுதல் பணிகளைத் துவக்கும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு புதனன்று பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி நினைவில்லம் உருவாக்குவதற்காக நிலம் கையகப்படுத்தபடுவதாகவும், இதன்காரணமாக அந்தப்பகுதியில் எந்த குடும்பமும் வெளியேற வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.