முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி 

கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டயில் மொத்தம் 8 பேர் கரோனா தொற்று எற்பட்டுள்ளது. 

12வயது சிறுமி உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள 4 பேரும் சூளகிரியில் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள்.

 மாவட்டத்தில் இதுவரை 4 பெண்கள், 1 சிறுமி, 3 ஆண்கள் என 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு உள்ள 8 பேருக்கும் எந்தவித பாதிப்போ அறிகுறிகளோ இல்லை.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூளகிரி பகுதி கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சூளகிரியில் தொற்று ஏற்பட்டு உள்ள 6 பேரும் ஒசூரில் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →