தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா உறுதி; பாதிப்பு 6,009 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று புதிதாக 600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். 

DIN


தமிழகத்தில் இன்று புதிதாக 600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். 

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 13,980 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 600 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.  இந்த 600 பேரில் ஆண்கள் 405 பேர். பெண்கள் 195 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இருவர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைவாக இறப்பு விகிதம் 0.68% ஆக உள்ளது. 

அதேசமயம், இன்று ஒரே நாளில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,605 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் 2,16,416 மாதிரிகளுக்கு  கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 22 பேர் குற்றவாளி

நித்ய கன்னி... மனு பாக்கர்!

SCROLL FOR NEXT